திருகோணமலை பாலம்பட்டாறு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பத்தினி அம்மன் ஆலயம் வெள்ளத்தின் காரணமாக முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக பெய்த மழையால் பாலம்பட்டாறு பகுதியில் நீர்மட்டம் பெருமளவில் உயர்ந்து, ஆலயம் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காணப்படுகிறது. இந்த நிலைமை பக்தர்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலயத்தை சுற்றியுள்ள பகுதியிலும் வெள்ளம் கடுமையாகப் பரவியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1