மூன்று மாத காலமாக வீதியோரம் விழுந்த நிலையில் உள்ள பனை மரம் தொடர்பில் தகவல் அறிந்தும் உத்தியோகத்தர்கள் பொறுப்பின்றி செயற்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
யாழ் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் இறுதிப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பனை மரம் ஒன்று வீதியோரத்தில் விழுந்து காணப்படுகிறது
இதனை அவதானித்த ஊடகவியலாளர் ஒருவர், அக்கிராமத்தின் கிராம உத்தியோகத்தரை அது தொடர்பாக வினவிய போது இவ்மரம் விழுந்தது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ பொறுப்பாளருக்கு தாம் அறிவித்ததாகவும் அவர் வந்து பார்வையிட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்தும் குறித்த ஊடகவியலாளர் உத்தியோகத்தரை நோக்கி வினாக்களை தொடுத்த போது, குறித்த உத்தியோகத்தர் அவ் மரம் விழுந்து இருப்பதால் பாரியளவு பிரச்சினை எதுவும் இல்லை எனவும் அதற்கு தாம் பொறுப்பு கூற தேவை இல்லை எனவும் குறிப்பிட்டார்
பின் அவ் உத்தியோகத்தர் இவ் மரம் ரெலிகோம் வயரினை ஊடுருத்து விழுந்து இருப்பதால் இதற்கு அவர்கள் தான் பதில் கூற வேண்டும் என கூறினார்
இவ் விடயம் தொடர்பாக தாம் ரெலிகோம்க்கு அறிவித்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்
இதனை தொடர்ந்து குறித்த ஊடகவியலாளர் ரெலிகோம் உத்தியோகத்தரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, தமக்கு இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டு ஒரு கிழமைக்குள் மரத்தினை அகற்றுவதாகவும் கூறியிருந்தனர்.
எனினும், ரெலிகோம் உத்தியோகத்தர் குறித்த ஊடகவியலாளர்களுக்கு இந்த பதில் கூறி மூன்று கிழமைகள் கடந்த நிலையிலும், இதுவரையில் ரெலிகோம் உத்தியோகத்தர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரம் விழுந்து இருப்பதால் அதன் பக்கம் உள்ள மின் கம்பங்கள் விழும் அபாயத்தில் இருப்பது அறிந்த கிராம மக்கள் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.