தற்போது பெய்துவருகின்ற மழை காரணமாக இரணைமடுவின் வான் கதவுகள் அனைத்து மூன்றாவது தடவையாக திறக்கப்பட்டமையால் கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்திற்குட்பட்ட பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அறுவடைக்குத் தயாரான நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களும் அழிவடைந்துள்ளன.
அத்தோடு வெள்ளம் காரணமாக முதலைகளும் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் இதன் காரணமாக வீட்டிலோ அல்லது வெளியில் செல்வோர் தனிமையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பெரியகுளம் பகுதியில் இருந்து புளியம்பொக்கனை செல்லும் பிரதான வீதியில் வெள்ளம் வீதியை குறுக்கறுத்து பாய்வதன் காரணமாக கனரக வாகனங்கள் மாத்திரமே இவ்வீதி ஊடாக பயணிக்க கூடியதாக உள்ளதாகவும் வழமையான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை மாணவர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
-மு.தமிழ்ச்செல்வன்-