அம்பாந்தோட்டையில் சீனாவின் சினோபெக்குடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையில் இதேபோன்ற எண்ணெய் சுத்திகரிப்பு வசதி நிறுவப்படும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமீபத்தில் சீனாவிற்கு விஜயம் செய்து, சினோபெக்குடன் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்திட்டார்.
இந்த எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம், முதன்மையாக ஏற்றுமதி சந்தைக்கு நோக்கமாக இருப்பதாகவும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒட்டிய 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமையப்போகின்றது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை மற்றும் இந்தியா இடையே பல்துறை பெட்ரோலிய குழாய் இணைப்பை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனவும், இந்தியா இதற்கு ஒப்புக்கொள்வதாக இருந்தால், அதன் முழுமையான கூட்டுறவு ஏற்படுத்தப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.
திருகோணமலை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நிறுவும் திட்டம் குறித்து, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கையெழுத்தான கூட்டு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நிறுவனமும் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது