திருக்கோவில் சாகாமம் அலிக்காம்பை பிரதேசங்களை தரை வழியாக இணைக்கும் சாகாமம் பாலம் இன்று அதிகரித்த ஆற்றின் நீர்மட்டம் காரணமாக இராணுவம் மற்றும் பொலிஸாரினால் தடை செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அந்த வழியில் பயணம் செய்பவரான விவசாயிகள் மற்றும் வாகன சாரதிகள் அன்றாட கடமைகளை நிறைவேற்றுவதில் சிரமங்களை சந்தித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை மற்றும் சேனநாயக்க சமுத்திர வான் கதவின் திறப்பால் வெள்ளம் பரவல் நிலையை மேலும் அதிகரித்துள்ளதோடு, அருகிலுள்ள வேளாண்மைகள் வெள்ளத்தினால் பெரிதும் அழிவடைந்துள்ளன.
சாகாமம் பாலம் ஊடறுக்கும் வெள்ள நீர் போக்குவரத்துக்கு தடைசெய்யும் நிலையை உருவாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ள காலத்தில் இடம் பெற்ற உயிரிழப்பு சம்பவங்கள் தொடரக்கூடாது என்பதில் பாதுகாப்பு படை கவனம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1