ஐதராபாத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் மற்றும் செக்யூரிட்டி தொழிலாளி குருமூர்த்தியின் கொடூர செயல் செவிகொடுத்தவர்களைத் திகைக்க வைத்துள்ளது. தனது மனைவியான மாதவியை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி ப்ரஷர் குக்கரில் வேக வைத்ததுடன், எலும்புகளை உரலில் இடித்து சாக்கு மூட்டைகளில் கட்டி ஏரியில் வீசியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கடந்த 18ம் திகதியிலிருந்து மாதவி காணாமல் போனதை அடுத்து, மாதவியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். விசாரணையின் போது, கணவனான குருமூர்த்தி தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
குருமூர்த்தி தனது வாக்குமூலத்தில், மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அவசர கோபத்தில் அவர் இந்த கொலை செய்ததாக தெரிவித்தார். தனது குற்றத்தை மறைக்க, உடலை குளியலறையில் வைத்து துண்டு துண்டாக வெட்டி, ப்ரஷர் குக்கரில் வேக வைத்து எலும்புகளை உரலில் இடித்து, பின்னர் சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
குறித்த ஏரியில் பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் உடல் பாகங்களைத் தேடியும் இதுவரை எதுவும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இவ்வளவு கொடூரமாக தனது மனைவியை கொன்ற குருமூர்த்தி தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஐதராபாத் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.