மாத்தளை இரத்தோட்டையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலைஅன்புவழிப்புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.சிங்காரவேல் இராமநாதன் அவர்கள் 22.01.2025 ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சிங்காரவேல் இலட்சுமி அவர்களின் பாசமிகு புதல்வனும், மகேஸ்வரியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற சுப்பையா, சரோஜா, தர்மலிங்கம் மற்றும் ஜானகியின் பாசமிகு சகோதரனும், பஞ்சவர்ணம், செல்லையா, தர்மலிங்கம், இந்திரா அவர்களின் மைத்துனரும், கலைச்செல்வன், சுதர்சினி, இராம் பிரஷாத், உமாரமணன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், ஜோதிலக்ஸ்மி, லதியசங்கர், பிரியா, ஹம்சத்வேணி ஆகியோரின் மாமனாரும், ஸ்ரீஜா, தஸ்வின், நீதீஸ், அத்விக், திஸாதனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 23.01.2025 வியாழக்கிழமை இல.239, அன்புவழிபுரம், திருகோணமலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் கிரியைகள் நடைபெற்று மாலை 03.00 மணியளவில் நல்லடக்கத்திற்காக அன்புவழிபுரம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்