வழக்கு இலக்கம் 43778/PC, மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு போராட்ட வழக்கு அடிப்படையில், இன்றைய தினம் (22) வழக்கின் 8வது தவணை இடம்பெற்றிருந்தது.
மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு விடயமாக முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக கடந்த 08/09/2023ல் கொம்மாதுறையில் கவன ஈர்ப்பு போராட்டம் மீதான வழக்கு இன்று (22/01/2025) எடுத்துக்கொள்ளப்பட்டு மீண்டும் 9வது தவணை 21/04/2025ல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ் வழக்கின்படி 30, பேருக்கும் ஒரு இலட்சம் சரீர பிணை வழங்கப்பட்டதுடன், ஒருவாரத்துக்குள் நீதிமன்றில் தனித்தனியாக பிணையாளிகளுடன் பதிவு செய்யுமாறு கால காலவகாசம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1வது வழக்கு, 17/11/2023 அன்றும், 2வது தவணை-24/01/2024 அன்றும், 3வது தவணை- 04/03/2024 அன்றும், 4வது தவணை 20/03/2024 அன்றும், 5வது தவணை -15/05/2024 அன்றும், 6வது தவணை -10/07/2024 அன்றும், 7வது தவணை- 16/10/2024 அன்றும் இடம்பெறுள்ள நிலையில் 8வது தவணை இன்று 22/01/2025 இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், 9வது தவணை வரும் ஏப்ரல் மாதம், 21ம் திகதி (21/04/2025) விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வழக்கில் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிதரன் என்பவர் நாட்டில் இல்லாத காரணத்தால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்ததுடன் குடிவரவு குடியல்வு திணைக்களத்திற்கும் அவரின் விபரத்தை அனுப்புமாறும் பணிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ச்சியாக இவ்வாறு மக்கள் இழுத்தடிப்பு செய்யப்படுவது விமர்சிக்கப்படுகின்றது.