26.2 C
Jaffna
January 22, 2025
Pagetamil
கிழக்கு

திருகோணமலையின் முதல் முஸ்லிம் ASP

திருகோணமலை குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, முஹம்மது சுல்தான் நஜீம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, கிண்ணியாவிலிருந்து உருவான முதல் ASP அதிகாரியாகவும், திருகோணமலையின் முதல் முஸ்லிம் ASP அதிகாரியாகவும் சாதனை படைத்துள்ளார்.

பொலிஸ் துறையில் சிறப்பான நிர்வாகத் திறனை வெளிப்படுத்திய இவர், சிங்களமும் தமிழும் சிறப்பாக பேசும் பன்மொழிப் புலமைமிக்க அதிகாரியாக விளங்குகிறார். மேலும், அவரின் கவிதைகள் தேசிய பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளதுடன், மனிதநேயத்துடனும் நேர்மையுடனும் பணியாற்றும் அதிகாரியாக மக்கள் மத்தியில் பெருமை பெற்றுவருகின்றார்.

முஹம்மது சுல்தான் நஜீம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமை துறையில் பட்டப்பின் டிப்ளோமாவை (Executive Diploma in Human Rights) வெற்றிகரமாக முடித்துள்ள இவர், தனது அறிவியல் மற்றும் தொழில்முறை தேர்ச்சிகளுக்காக Crime Scene Management, Environmental Law, Public Order Management, Miscellaneous Complaint Handling முதலான சான்றிதழ் பாடநெறிகளையும் நிறைவு செய்துள்ளார்.

பொலிஸ் துறையில் அவரது தனித்துவத்தை நிலைநாட்டும் இளம் அதிகாரியான முஹம்மது சுல்தான் நஜீம் அவர்கள் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அலஸ்தோட்டத்தில் பாரிய விபத்து

east tamil

கிழக்கு மாகாண ஆளுநரின் மக்கள் தினம்

east tamil

ஜப்பானிய தூதுவரும் கிழக்கு மாகாண ஆளுநரும் சந்திப்பு

east tamil

மட்டக்களப்பில் வெள்ளம்: 10,031 பேர் தஞ்சம், 3737 குடும்பங்கள் பாதிப்பு

east tamil

திருடப்பட்ட மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது – வெட்டுவதற்கான ஆயுதங்களும் மீட்பு!

east tamil

Leave a Comment