24.8 C
Jaffna
February 2, 2025
Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பில் வெள்ளம்: 10,031 பேர் தஞ்சம், 3737 குடும்பங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீடித்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 11,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 9 முகாம்களில் 921 பேர் தஞ்சமடைந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ் வெள்ள அனர்த்தத்தால் 17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, 3,737 குடும்பங்களைச் சேர்ந்த 10,031 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, பல ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

கனமழையால் பெரும் குளங்கள், உன்னிச்சை குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியதையடுத்து, அவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டதால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், வெள்ளாவெளி – மண்டூர்,  இடையிலான போக்குவரத்துத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகு சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் மற்றும் உதவிக் குழுக்கள் மூலம் சமைத்த உணவுகள் வழங்கப்படுகின்றன.

வெள்ளம் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் பல குடும்பங்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. நீடித்த மழையால் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பலர் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் உடனடி உதவிகளை எதிர்பார்த்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கம்பளை வீதியில் விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்!

east tamil

வேலூர் இந்து மயானத்தை சீரமைக்க கோரிக்கை

east tamil

கங்குவேலியில் உழவர் தின நிகழ்வு

east tamil

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் செங்கலடி பொது மயான சுத்தம்

east tamil

தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல்

east tamil

Leave a Comment