கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகொட பகுதியில் நேற்று (20) இரவு இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலுக்கு மாறி, 31 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன், 29 வயதுடைய மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த மற்றும் காயமடைந்த இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதுடன், தனிப்பட்ட தகராறு காரணமாக இம்மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1