தாய்வானில் இன்று (21) அதிகாலை 12.17 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
யுஜிங் நகரிலிருந்து வடக்கே 12 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.0 ரிச்டர் அளவுகோலில் மாபெரும் நிலநடுக்கமாக பதிவாகியுள்ளதால், அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அதிர்ந்துள்ளன.
இதனால், மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக அறியமானது. ஆனாலும், உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனத் தாய்வானின் ஊடகங்கள் தகவல் வழங்கினயுள்ளன.
பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1