அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) விலகும் உத்தரவை கையெழுத்திட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுநோயும் பிற சர்வதேச சுகாதார நெருக்கடிகளும் உலக சுகாதார அமைப்பால் தவறாக கையாளப்பட்டதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இதன் அடிப்படையில், 12 மாதங்களுக்குள் அமெரிக்கா WHO-விலிருந்து முற்றிலுமாக விலகும் என்பதை உறுதிப்படுத்தியதோடு, அமைப்பிற்கு வழங்கப்பட்ட அனைத்து நிதி பங்களிப்புகளும் நிறுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
WHO-வின் மொத்த நிதியில் 18% அமெரிக்கா வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த முடிவு உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
இந்த அறிவிப்பு, சர்வதேச சமூகத்திலும் சுகாதார வல்லுநர்களிடமும் கலந்துரையாடலுக்குரிய விவகாரமாக மாறியுள்ளது.