கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர அவர்களின் தலைமையில், பொதுமக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை விரைவுபடுத்தும் நோக்கில் இன்று (21) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் மக்கள் தினம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, திருகோணமலை மாவட்டச் செயலாளர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைச் செயலாளர்கள் மற்றும் பல பொறுப்பான நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு தங்கள் பிரச்சனைகளை அதிகாரிகளிடம் நேரடியாக தெரிவிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்ட இந்த நிகழ்வில், ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளரிடமும் நேரடியாகப் பேசி பிரச்சனைகளை முன்வைக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதன் மூலம் மக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தொடர்பை மேலும் வலுப்படுத்துவதுடன், பிரச்சனைகளுக்கான தீர்வுகள் உடனடியாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.