விசாரணையின் பெயரில் அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு

Date:

வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் நேற்று சனிக்கிழமை பருத்தித்துறை நகர் பகுதியில் மது போதையில் நின்ற தருணம் குறித்த நபருக்கு பிடியாணை உள்ளதாக கூறி விசாரணை செய்ய வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணையின் பெயரில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

49 வயது குடும்பஸ்தரான சந்திரகுமார் சந்திரபாலன் என்பவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் இரவு உயிரிழந்த நிலையில் வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடற்கூறு பரிசோதனையில் மேலதிக தகவல்கள் பெற வேண்டியிருந்ததால் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தின் உடலில் அடி காயங்கள் காணப்படுவதாகவும் இது பொலிஸாரின் தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதனாலேயே குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...

அதிமுகவில் பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவி பறிப்பு

அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகளை...

முள்ளிவாய்க்கால் அவலம்: 17 வருடங்களின் பின் மே மாதத்தில் மஹிந்த குடும்பம் கண்ணீர் விடுகிறது!

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் போது தமிழ் மக்கள் விட்ட கண்ணீர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்