மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில், மேசன் வேலை செய்து கொண்டிருந்த 24 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் (18.01.2025) காலை இந்த பரிதாபமான சம்பவம் இடம்பெற்றுள்ளது..
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், இரு பிள்ளைகளுக்கு தந்தையான குறித்த இளைஞன் மேசன் வேலை செய்துகொண்டிருந்த வேளை, மின் இணைப்பை பெற முயற்சித்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த துயரமான நிகழ்வு, அக் கிராம மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1