இலங்கை நிதியமைச்சர் சமன் ஜயவிரத்ன தமது சமீபத்திய உரையில் “இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லை” என தெரிவித்த கருத்திற்கு, அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இன்று (18.01.2025) யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே, இலங்கை நிதியமைச்சரின் கருத்தை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்றைய அரசியலில், இலங்கை நிதி அமைச்சர் அண்மையில் தெரிவித்த கருத்து குறித்து, “இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதியாக்கப்பட்டவர்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் தமது இனத்துக்காக போராடியவர்கள், அவர்களால் எதுவும் தமது சுயநலத்திற்காகப் போராடவில்லை” என தெரிவித்திருந்தார்.
மேலும், அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்றும், அவர்கள் அரசியல் கைதிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்