கொழும்பை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். அருமைநாயகம் அன்ரன் செல்வராஜன் (Coconut Beach Lodge – உரிமையாளர்) 17.01.2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஜோர்ஜ் அருமைநாயகம் மற்றும் மேரிரோஸ் ஆகியோரின் அன்பு புதல்வரும், காமல் செல்வராணி, லெஸ்லி ரவீந்திரன் (புகையிரத திணைக்கள ஓய்வு பெற்றவர்), கொன்ஸிகா ஜெயந்தினி, லிஸ்டன் ரமேஷ் (மின்னினைப்பாளர்), எட்வர்ட் சுரேஸ் (பொது வைத்தியசாலை), ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 19.01.2025 ஞாயிற்றுகிழமை காலை 9.30 மணிக்கு, இல.30, நீதிமன்ற வீதி, திருகோணமலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நல்லடக்கத்திற்காக திருகோணமலை கத்தோலிக்க சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.
இல.30,
நீதிமன்ற வீதி,
திருக்கோணமலை,
077 717 7286, 077 554 4724
தகவல் குடும்பத்தினர்