30.9 C
Jaffna
April 29, 2025
Pagetamil
உலகம்

படகு கவிழ்ந்து 40 பாகிஸ்தானியர்கள் பலி

மொராக்கோ அருகே அட்லாண்டிக் கடற்கரையில் நேற்று (17) ஏற்பட்ட படகு விபத்தில் 40 பாகிஸ்தானியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் குடியேற முயன்று மோரிடானியாவில் இருந்து 65 பாகிஸ்தானியர்கள் உட்பட 80 பேருடன் இந்த படகு புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மொராக்கோவின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுக நகரமான டக்லா அருகே, கடலின் கோரமான அலைகள் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த அதிர்ச்சிகரமான விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்களெனவும் புலம்பெயர்ந்தோர் உரிமைகளுக்கான குழு, ‘வோக்கிங் போர்டர்ஸ்’, தகவல் வெளியிட்டுள்ளது.

இவ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி அவர்களும் , பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அவர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 2ம் திகதி தொடங்கிய இவர்களது பயணம் தற்போது பத்தின் காரணமாக தடைப்பட்டதோடு, இவ் விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் தம் குடும்பங்களை தொடர்பு கொண்டு பேசிதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்துக்கான முழுமையான விசாரணை நடத்த பாகிஸ்தான் அரசு ஆறு பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளதோடு, மொராக்கோவின் தலைநகர் ரபாத் மற்றும் டக்லாவுக்கு அதிகாரிகளை அனுப்பி, நிலைமைகளை ஆய்வு செய்து விரிவான அறிக்கையை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த விபத்து, புலம்பெயர்வோரின் வாழ்க்கை பிரச்சினைகளையும், கடல் பாதையின் உயிரிழப்புகளையும் மீண்டும் ஒளிரச்செய்கிறது. மனித உளவியலையும், அரசியல் சூழலையும் சிக்கலாக்கும் இத்தகைய விபத்துகள், சர்வதேச சமுதாயத்தின் கவனத்தைத் திருப்ப வைக்கின்றன.

இதையும் படியுங்கள்

3 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் புடின்!

Pagetamil

குர்ஸ்க் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டதை பகிரங்கப்படுத்திய வடகொரியா

Pagetamil

ஈரான் துறைமுகத்தில் பெரும் வெடிவிபத்து!

Pagetamil

‘பாகிஸ்தானுக்குள் ஏதேனும் சாகசம் செய்ய முயன்றால்…’: இந்தியாவின் அடிவயிற்றை கலங்க செய்யும் பாகிஸ்தானின் எச்சரிக்கை!

Pagetamil

சமாதான பேச்சுக்கு தீங்கு விளைவிக்கிறார்: ஜெலன்ஸ்கியை கடுமையாக சாடிய டிரம்ப்!

Pagetamil

Leave a Comment