இன்று (18.01.2025) காலை 10 மணியளவில் திருகோணமலை சர்வோதயம் மண்டபத்தில் இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இடம்பெற்றது.
இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் தற்போதைய தலைவர் சி.வி.கே. சிவஞானம், ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் ஸ்ரீதரன், சாணக்கியன், வைத்தியர் ஸ்ரீநாத், ஸ்ரீநேசன், குகதாசன், கோடீஸ்வரன், ரவிகரன், உறுப்பினர்கள் சயந்தன், பீட்டர் இளஞ்செழியன், யோகேஸ்வரன், சேயோன் ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர்.
மாலை 4.00 மணி வரை இடம்பெற்ற இக் கூட்டத்தில் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் கருத்து தெரிவிக்கும் போது, உள்ளூராட்சி தேர்தல்களில், முன்னர் தங்கள் கட்சியால் வேட்பு மனு வழங்கப்பட்ட வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலும், புதிய வேட்பாளர்களை தொடர்ச்சியாகவும் உள்வாங்குதல் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
![](https://pagetamil.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-18-at-16.44.42.jpeg)
அத்துடன், புதிய அரசியலமைப்பை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியை வலியுறுத்துவதெனவும் குறிப்பிட்டு, சீனாவுக்கும் இந்தியாவுக்குமான ஜனாதிபதியின் பயணம் தொடர்பிலும் குறிப்பிட்டார்.