யாழ்ப்பாணத்தில் பட்டம் பறக்கவிட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை பாம்பு தீண்டியதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் நேற்று (16) இளைஞர் பட்டம் பறக்கவிட்டுக்கொண்டிருந்த போது விஷப்பாம்பு ஒன்று அவரை தீண்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
திடீர் இந்த சம்பவத்தால் அச்சமடைந்த இளைஞர் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, அங்கு மருத்துவசிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த இளைஞனுக்கு பாம்பு தீண்டலுக்கான சிகிச்சை முறைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1