திருகோணமலை மூதூர் கிளிவெட்டி தங்கநகரைச் சேர்ந்த நாகரெட்ணம் வனஜா (42) என்பவர் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க கடந்த ஒன்றரை வருடங்களாக சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இம்மாதம் (3) திகதி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்ததையடுத்து, அவரது குடும்பம் மிகுந்த துயரத்தில் மூழ்கியுள்ளது. இரு பெண் குழந்தைகளின் தாயான வனஜாவின் உடலை நாட்டுக்கு அனுப்புவதாக அறிவித்தாலும், அதை வீட்டுக்குச் சேர்ப்பது எப்படி என்பது குறித்து குடும்பம் மிகுந்த அதிர்ச்சி மற்றும் குழப்பத்தில் உள்ளது. இதற்கான உதவிகளை குறித்த குடும்பத்தினர் கோரி நிற்கின்றனர்.
குடும்பத்தின் இந்த பரிதாப நிலை, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் புறப்படும் பலரின் நிம்மதியற்ற நிலையை பிரதிபலிப்பதாகவே அமைந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1