இலங்கை ரூபாவின் பெறுமதி, அமெரிக்க டொலருக்கு எதிராக இன்று (17) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூ.292.21 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ.300.69 ஆகவும் காணப்படுகிறது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 291.38 ரூபாவாகவும், 299.93 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
மேலும், வளைகுடா நாணயங்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கும் எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சியைக் காணக்கூடியதாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1