அன்புச்செல்வ ஊற்று அறக்கட்டளையின் நிர்வாகசபையில் புதிய தலைவர் மற்றும் புதிய செயலாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவ் அறக்கட்டளையின் ஸ்தாபகர்களான திரு. விஸ்வலிங்கம் அருணகிரி (கனடா) மற்றும் குமாரசாமி பாஸ்கரன் (சுவிஸ்)ஆகியோரின் வேண்டுகோளுக்கமைய நிர்வாகசபையினரால் தலைவராக மீண்டும் ஆர்.எஸ். ஜெரோம் தெரிவுசெய்யப்பட்டதோடு, செயலாளராக சமூகசெயற்பாட்டாளர் திரு. மத்தியூஸ் அன்டனி அவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் செயலாளராக சிறப்பாக கடமைபுரிந்த திரு. இராஜேந்திரம் (ராஜன்) அவர்கள் இவ் அறக்கட்டளையின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இவ் அறக்கட்டளையின் தலைவர்களாக திரு.கே.காளிராசா (ஓய்வுநிலை அதிபர்), திரு.எஸ்.உதயசங்கர் (ஓய்வுநிலை ஆசிரியர்) சிறப்பாக இவ் அறக்கட்டளையை வழிநடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் அறக்கட்டளையின் பொருளாளராக திருமதி.எஸ்.ஞானராசா (ஓய்வுநிலை அதிபர்) அவர்கள் கடமைபுரிவதோடு, உபதலைவர், உபசெயலாளர் உட்பட ஒன்பது செயற்குழு உறுப்பினர்கள் இந் நிர்வாக சபையில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
அன்புவழிபுரம்,செல்வநாயகபுரம், பாலையூற்று ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கல்விநடவடிக்கைகளுக்கு உதவுதல் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குவதே இவ் அறக்கட்டளையின் நோக்கமாக விளங்குகின்றது.