வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படியில் சற்றுமுன் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
கடலில் நிலவும் கடும் காற்றினால் குறித்த மிதவை கரையொதுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது, மேலும் சம்பவ இடத்தில் இராணுவம், கடற்படை சேர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதோடு குறித்த மிதவையை பொதுமக்களும் பார்வையிட்ட வண்ணம் உள்ளனர்.
அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளில் மிதக்கும் கூடாரங்கள், மிதவைகள் மற்றும் அதற்கு இணையான பொருள்கள் கரையொதுங்குவதன் பின்னணி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவை அவதானிப்பிற்குரிய சூழலை உருவாக்கியுள்ளதால் பாதுகாப்பு அமைப்புகள் கூர்மையான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1