யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்குச் நேற்று மதியம் சென்ற குழுவொன்று 30 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வருமான வரித்துறை என தெரிவித்து நகைக் கடைக்குள் நுழைந்த மூவரடங்கிய குழு சோதனை நடத்தப்போவதாக தெரிவித்து, கடையின் வாயில் கதவுகளை பூட்டியுள்ளனர். வருமானத்துக்கு அதிகமாக கடையில் பணமும், தங்க நகைகளும் இருப்பதாக தெரிவித்து, பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1