26.3 C
Jaffna
January 17, 2025
Pagetamil
இலங்கை

முள்ளியவளைப் படுகொலை: 1985ல் மனித நேயம் கண்ணீரை சிந்திய நாள்

முல்லை மற்றும் மருத நிலங்கள் சூழ்ந்த, பாரம்பரிய கலை, பண்பாட்டால் சிறந்த முள்ளியவளை கிராமம், 1985 ஜனவரி 16 அன்று கரிமையான ஒரு நிகழ்வின் சாட்சியாக மாறியது.

அந்த ஆண்டின் தைப்பொங்கலின் மறுநாள், பட்டிப் பொங்கலின் பிற்பகுதியில், அதிகாலை 4 மணியளவில் முல்லைத்தீவில் நிலைகொண்டிருந்த அரச இராணுவத்தினர் முள்ளியவளை கிராமத்தை முற்றுகையிட்டனர். வழமையான முறையில் தமது காலைக்கடன்களில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள், தமது கிராமம் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதை அறிவதற்குள் பேரதிர்ச்சியை எதிர்கொண்டனர்.

அந்த அதிகாலையில், ஏழு மாதக் கர்ப்பிணிப் பெண், மூன்று பிள்ளைகளின் தாய் உட்பட, மொத்தம் 17 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, அவர்கள் வாழ்விடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

பிடித்துச் செல்லப்பட்ட சிறிது நேரத்தில் சரமாரியான சூட்டுச் சத்தங்கள் கேட்டதை அவதானித்த உறவினர்களுக்கு குறித்த சத்தத்தின் பின்னர், பிடித்துச் செல்லப்பட்ட பதினேழு பேரும் உயிரிழந்து விட்டார்கள் எனும் செய்தி பரவத்தொடங்கிய அதிர்ந்து போனனர்.

சிறிது நேரத்தில் இராணுவ வாகனங்கள் முல்லைத்தீவை நோக்கி நகரத்தொடங்கின. உயிரிழந்த 17 பேரின் உறவினர்கள் தமது உறவுகளை ஒவ்வொரு வாகனங்களாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஒரு வாகனத்தில் மட்டும் சைக்கிள்கள், பொருட்கள் ஏற்றப்பட்டு இராணுவத்தினர் சென்றதைக் கண்ட உறவினரால் அதற்குள் உயிரிழந்தவர்கள் உடலங்கள் இருப்பதை அறியாதவர்களாகினர்.

அன்றையபொழுது மறைந்து மறுநாளும் தமது உறவினர்கள் வீடு திரும்பாத நிலையில் ஊரிலிருநத் சமாதான நீதவான் திரு.தியாகராசா என்பவருடன் முல்லைத்தீவு இராணுவ முகாமிற்குச் சென்றிருந்த போது அங்கு இறந்தவர்களின் உடல்கள் வீசப்பட்டிருந்தன. அங்கே வீசப்பட்டிருந்த உடல்கள், உடைகள் அற்றும், கைகள், கால்கள். தலைகள் என்பன துண்டிக்கப்பட்டும், உடல்களில் காயங்கள் பல ஏற்படுத்திக் கொலை செய்யப்பட்டும் இருந்ததைக் கண்டனர் மனம்வெதும்பி போயினர்.

கர்ப்பிணிப்பெண் என்றும் பாராமல், குறித்த கர்ப்பிணியின் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் குழந்தை சுமந்த வயிற்றுப் பகுதி எரிக்கப்பட்டு சிசு பரிதாபமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததையும், மற்றைய பெண்ணின் உடல் சிகரட் சூட்டுக் காயங்களுடன், அடையாளம் தெரியாத வகையில் துன்புறுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருந்ததையும் கண்டு அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாயிருந்தனர்.

உறவினர்கள் இறந்தவர்களின் உடல்களை மீட்க முயன்றபோது, இராணுவத்தினர், கொல்லப்பட்டவர்களை பயங்கரவாதிகளாக கையொப்பமிட்டு ஒப்புக்கொண்டால் மட்டுமே உடல்களை ஒப்படைப்பதாக மிரட்டினர். உறவினர்கள் அதனை ஏற்க மறுத்ததால், உடல்களுக்கு இராணுவத்தினரே தீ வைத்தனர்.

அன்றைய கொடூர சம்பவத்தில், நாகரெட்ணம் ஸ்ரீஸ்கந்தராசா, குமாரசாமி விஜயகுமாரி (வீட்டுப் பணி), பிலிப்பையா அன்ரன்யோகராசா (வயது 17-கடற்தொழில்), தம்பையா விவேகானந்தம் (மாணவன்), மார்க்கண்டு தெட்சணாமூர்த்தி (வயது 19-கடற்தொழில்), செல்லத்துரை நவரட்ணம் (விவசாயம்), செல்லத்துரை குமாரசாமி (விவசாயம்), சுப்பன் சின்னன், சின்னன் அன்னலட்சுமி என 09 பேரும் மனிதாபமற்ற முறையில் கொல்லப்பட்டிருந்தனர்.

உயிரிழந்த பலரின் பெயர்களை பதிவுசெய்தாலும், பாதிக்கப்பட்ட அனைவரது விவரங்களை முழுமையாகப் பெற முடியவில்லை. அந்தப் படுகொலையின் கண்ணீரும், கொதிக்கும் சோகமும் இன்னும் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் தீயாய் எரிந்துகொண்டிருக்கின்றது.

மறக்கமுடியாத இப்படியொரு கொடூர நிகழ்வை, அந்த மனித வாழ்வின் மதிப்பை நினைவுகூர, அதற்கான நீதியை தேடி…

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

east tamil

துமிந்த சில்வா, ஹிரு பற்றிய தகவல்களை வெளியிட தடை

Pagetamil

பட்டம் விட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள்

Pagetamil

மன்னார் பிரதேச வைத்தியசாலைகளுக்கு ரிஷாட் எம்.பி விஜயம்

east tamil

Leave a Comment