26.3 C
Jaffna
January 17, 2025
Pagetamil
இலங்கை

நானாட்டான் பிரதேச சபைச் செயலாளரின் முறைகேடு

நானாட்டான் பிரதேச சபைச் செயலாளராக உள்ள திரு. சேவியர் லெம்பேட் றெனால்ட், அரச வாகனத்தை முறையற்ற முறையில் தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தி வருவதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

பிரதேச சபைக்கு சொந்தமான, மக்களின் வரிப்பணத்தில் குறைந்தளவு வருமானத்தில் இயங்குவதும், குறைந்தளவு வளங்களைக்கொண்ட NP PF-5912 எனும் எண்ணையுடைய அலுவலக வாகனத்தை, தனது மன்னார் குழந்தை யேசுபுரம் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு தினமும் சென்று வர பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த வாகனம் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவுக்கு பயணிக்கும் நிலையில் உள்ளது.

வாகனம் புகை கக்கும் அளவிற்கு பழுதடைந்த நிலையுடையதாக இருந்த, தனது சொந்த தேவைகளுக்காக அரசு நிதியை வீணடித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த முறைகேடு மன்னார் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெரிந்திருந்தும் ஏன் இது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது என்பது ஆச்சரியமாக உள்ளது.

இந்நிலையில், பொது நிதி முறைகேடு தொடர்பாக உரிய அதிகாரிகளின் தலையீட்டை வலியுறுத்தி, நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண ஆளுநருக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், றிஷாட் பதியுதீன், காதர் மஸ்தான் மற்றும் துரைராசா ரவிக்குமார் மற்றும் வட மாகாண நிர்வாகத்திலிருந்து பிரதிப் பிரதம செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், மற்றும் மாகாண கணக்காய்வு அலுவலகத்தினரிடமும் இவ் விடயம் சார்ந்து கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மக்களின் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்தும் இந்த செயலின் மீது அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் உரிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

east tamil

துமிந்த சில்வா, ஹிரு பற்றிய தகவல்களை வெளியிட தடை

Pagetamil

பட்டம் விட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள்

Pagetamil

மன்னார் பிரதேச வைத்தியசாலைகளுக்கு ரிஷாட் எம்.பி விஜயம்

east tamil

Leave a Comment