திருகோணமலை கும்புறுப்பிட்டியில் உயர் அழுத்த மின்சார வேலிகளை அமைத்ததினால் யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.
பாதுகாப்பிற்காக மின்சார வேலிகளை நிறுவுவது நோக்கமாக இருந்த போதிலும், அவை பராமரிப்பின் பிழைகளால் இத்தகைய விபத்துகள் நிகழ்வதற்கு வழிவகுக்கின்றன.
உயிரிழந்த யானையினை மறைத்து அதன் மீதான சிக்கல்களை தவிர்ப்பதற்காக, சம்பந்தப்பட்ட நபர் யானையை எரிக்க முயன்றார். ஆனால் யானை முழுமையாக எரியாத நிலையில் இருந்ததை கண்டறிந்த பொலிஸார் உடனடியாக குறித்த நபரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களை மீறுவது தொடர்பாக மேலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1