25.4 C
Jaffna
January 18, 2025
Pagetamil
கிழக்கு

காட்டு யானை உயிரிழந்தது தொடர்பான விசாரணை

காட்டு யானையொன்று பிரதான வீதி ஓரத்தில் உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொத்துவில்-விக்டர் ஏத்தம் பிரதேச வீதி ஓரத்தில் காட்டு யானையொன்று இன்று(17) காலை உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த காட்டு யானை உட்பட சில யானைகள் அப்பகுதிகளில் நடமாடி திரிந்ததை அவதானித்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.

இவ்விடயம் தொடர்பில் காரணத்தை அறிவதற்காக பிரேத பரிசோதனை நடைபெறுவதுடன் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொத்துவில் பொலிஸார் இணைந்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் வருகை தந்த வண்ணம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சவுதியில் உயிரிழந்த மூதூர் பெண்

east tamil

திருகோணமலையில் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் குறித்த ஊழியர் விழிப்புணர்வு செயலமர்வு

east tamil

கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளுக்கு புதிதாக வைத்தியர்கள் நியமனம்

east tamil

வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

east tamil

களுதாவளைக் கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம பொருள்

east tamil

Leave a Comment