லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்க டென்னிஸ் வீரர் டெய்லர் பிரிட்ஸ் தனது பரிசுத் தொகையினை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.
தற்போது அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் அவர், ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் 82,000 அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையை பெற்றார்.
தனது வெற்றியின் மூலம் கிடைத்த பரிசுத் தொகையை லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
இந்த மனிதாபிமான நடவடிக்கைக்காக டெய்லர் பிரிட்ஸுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1