கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் செயல்படும் சுகாதார நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக புதிதாக நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் தங்கள் கடமைகளை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றனர்.
வைத்தியர்களின் சேவை நிலையங்களுக்கு கடிதங்கள் கையளித்து, அவர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்றைய தினம் (வியாழக்கிழமை 16) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் தலைமை தாங்கியிருந்தார்.
இந்த நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம். மாஹிர், தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் இர்ஷாத், மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் தொழில் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.எம். பௌசாத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் மத்திய முகாம், இறக்காமம், நிந்தவூர், மற்றும் மாவடிப்பள்ளி ஆகிய பிராந்திய வைத்தியசாலைகளில் பணியாற்ற நியமிக்கப்பட்டனர்.