26.3 C
Jaffna
January 17, 2025
Pagetamil
இலங்கை

இலங்கை-இந்திய மீனவர் விவகாரம்: மீனவர்களை ஏமாற்ற சிலர் முயற்சி – டக்ளஸ் தேவானந்தா

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் பேசுவதாக கூறி, வடபகுதி மீனவர்களை சில அரசியல்வாதிகள் ஏமாற்ற முயற்சிக்கின்றனர் என முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலினின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக பேசாமை குறித்து டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார். தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்வின் போது, செல்பி எடுத்தமையும், மீனவர்களின் பிரச்சினைகளைப் பற்றிய உரையாடல்களில் ஈடுபடாமையும் சமூக ஊடகங்களில் விவாதத்திற்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்..

தமிழக முதல்வரின் அருகில் இருந்த போதும், நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு பேச வாய்ப்பு இருந்த போதும், அதனை பயன்படுத்தாததமைக்கு டக்ளஸ் தேவானந்தா அதிருப்தி தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழக முதல்வருடன் மீனவ விவகாரம் தொடர்பில் பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளதாகவும் தெரிவித்திருந்தார். எனினும் இது வடபகுதி மீனவர்களை ஏமாற்ற அரங்கேறிய நாடகமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்,

தான் கடற்தொழில் அமைச்சராக இருந்த காலத்தில், இந்திய மீனவர்களின் எல்லை தாண்டல்களை கட்டுப்படுத்த இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றதாகவும், சில காரணங்களால் அப்பயணம் சாத்தியமாகவில்லை எனவும் அவர் நினைவூட்டிய அவர், தற்போதைய அரசியல்வாதிகள், மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்காமல், தமது சுயநலத்திற்காகவே செயல்படுகிறார்கள் எனவும் குற்றம்சாட்டினார்.

வடபகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு சரியான தீர்வு எடுக்காமல், சில தமிழ் அரசியல்வாதிகள் சுயலாப அரசியலில் ஈடுபடுவது வேதனைக்குரிய விடயமாக உள்ளதாக கருத்து தெரிவித்த டக்ளஸ் டக்ளஸ் தேவானந்தா மீனவர்கள் தமது பிரச்சினைகளை தீர்க்க மக்களையும், அரசியல் தலைவர்களையும் சரியான முடிவுகளை எடுக்கச் சமரசம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும், மக்கள் தமது ஓட்டுகளை யாருக்கு அளிக்கின்றனர் என்பதைப் பற்றிய விழிப்புணர்வு அவசியமாகும் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், முன்னாள் கடற்தொழில் அமைச்சராக இருந்தபோது பல்வேறு சாதனைகளை நினைவூட்டிய டக்ளஸ் தேவானந்தா, தமது முயற்சிகள் தமிழ் மக்களின் நலனுக்காகவே அமைந்ததாக வலியுறுத்தினார். அறிவியல்நகர் பல்கலைக்கழகத்தை இராணுவத்தின் பிடியிலிருந்து விடுவித்ததற்கு எடுத்த எடுத்துக்காட்டும், அவற்றை வழங்கிய அரசியல் திடங்களை சிறப்பாக பயன்படுத்தியதையும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினை தொடர்ச்சியாகத் தீர்வுகளுக்காக மத்தியில் உள்ளது. சரியான அணுகுமுறையும் உறுதியான நடவடிக்கைகளும் இந்த பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை ஏற்படுத்தும் என்பதை டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

east tamil

துமிந்த சில்வா, ஹிரு பற்றிய தகவல்களை வெளியிட தடை

Pagetamil

பட்டம் விட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள்

Pagetamil

மன்னார் பிரதேச வைத்தியசாலைகளுக்கு ரிஷாட் எம்.பி விஜயம்

east tamil

Leave a Comment