தேசிய மக்கள் சக்தியினர் மீது வாள்வெட்டு

Date:

பருத்தித்துறை கொட்டடிப் பகுதியில் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

பருத்தித்துறை கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த ஜெயதீபன் கண்ணன் (28) மற்றும் விஜயராசா செந்தூரன் (29) ஆகியோரின் தலை மற்றும் கால் பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்திற்கு முன்னதாக, நேநேற்று பிற்பகல் 3 மணியளவில் தொலைபேசி மூலம் பருத்தித்துறை – கொட்டடியைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்குத் தொடர்பு எடுத்த நபர் ஒருவர் நீ தானே எம்.பி.பி. அமைப்பாளர். கரையோரப் பகுதிகளில் தேசிய மக்கள் சக்திக்காக நீ தானே வேலை செய்கின்றாய்? உங்கள் கொட்டத்தை அடக்க உங்களது இடத்துக்கு வாள்வெட்டுக் குழுவென்று வருகின்றது பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்துள்ளார்.

அச்சுறுத்தலுக்குப் பின்னர், சுமார் பத்து நிமிடங்களில் மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினர், அங்கிருந்தவர்களைத் துரத்தி, சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இ. சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோர் விரைந்து வந்து, சூழலினை ஆராய்ந்ததுடன், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடினர்.

பருத்தித்துறைப் பொலிஸார் தாக்குதல்தாரிகளை அடையாளம் காணும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம், தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்பதால், இது அரசியல் மற்றும் சமூகவியலுக்கான அச்சுறுத்தலாகவே கருதப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல்...

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்