Pagetamil
இலங்கை

தேசிய மக்கள் சக்தி நிர்வாக அலுவலகம் தாளையடியில் திறந்துவைப்பு

இன்றைய தினம் (15.01.2025) காலை 11.00 மணியளவில் தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக காரியாலயம் யாழ். வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த காரியாலயத்தை கௌரவ கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வை கட்சியின் பிரதேச இணைப்பாளர் மாடசாமி செல்வராசா அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களின் சமாச தலைவர், பிரதேச கடற்றொழில் சங்க உறுப்பினர்கள், மருதங்கேணி இலங்கை வங்கி முகாமையாளர், மற்றும் கட்சியின் பிரதேச ஆதரவாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்த நிர்வாக காரியாலயம், பிரதேச மக்களின் தேவைகளுக்கு ஆதரவு அளிக்கும் முக்கிய மையமாக செயல்படவுள்ளது என வலியுறுத்தப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப்பொருள்: உதவியாளர் கைது

east tamil

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

Leave a Comment