சீகிரியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில், செக் குடியரசைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவரே நேற்று (14) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீகிரியாவிற்கு சுற்றுலா சென்றபோது குறித்த பெண் திடீரென மயங்கி விழுந்ததையடுத்து, உடனடியாக சீகிரியா – கிம்பிஸ்ஸ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீகிரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



