பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி சதவீதத்தை அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வௌியிட்டுள்ளது.
அதன்படி, உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மிகாமல் உள்ள வாகனங்களுக்கு 200%-300% வரி விதிக்க குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சில வகை வாகனங்கள் அவற்றின் இயந்திர சிலிண்டர் திறன் மற்றும் கிலோவாட்களில் அளவிடப்படும் மோட்டார் சக்தியின் அடிப்படையில் வரி விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த வரிகள் காரணமாக வாகன விலைகள் சுமார் 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. VAT உட்பட பிற வரிகளும் பயன்படுத்தப்பட்டால், அதிகரிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம்” என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே கூறினார்.