நேற்று மாலை (09.01.2025) மதவாச்சி பொலிஸ் பிரிவில் கட்டுவெல மயானம் அருகிலுள்ள குழியில் 30-40 வயதுக்குட்பட்ட பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக மதவாச்சிப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சடலத்தில் மேலாடை மற்றும் லெக்கின்ஸ் போன்ற ஆடைகள் இருந்ததோடு, அருகிலிருந்த பையில் கொழும்பில் இருந்து மதவாச்சிக்கு இ.போ.சபை பேருந்தில் பயணித்த சிட்டை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் உடலில் பல காயங்கள் காணப்பட்டதால், இது ஒரு கொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். சடலத்தை நீதவான் விசாரணைக்கு பிறகு பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டறிந்து கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மதவாச்சி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.