நுண்நிதி கடன் ஒழுங்குமுறை மசோதாவை மறுஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை நிதி அமைச்சின் மேம்பாட்டு நிதித் துறையின் பணிப்பாளர் நாயகம் மஞ்சுள ஹெட்டியாராச்சியிடம் இன்று சமர்ப்பித்துள்ளது.
2023ல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 6 அடிப்படை உரிமைகள் தொடர்பான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அதன் பல பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனையடுத்து, மசோதாவை மறுபரிசீலனை செய்ய குழுவை நியமித்து, சுமார் 5 மாதங்கள் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு, திருத்தங்கள் மற்றும் பரிசீலனை செய்ய வேண்டிய கருத்தியல் கொள்கைகள் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இந்த அறிக்கை தற்போது நிதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் அதன் மீது விரைவில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.