மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் கௌரவ முக்கிய பதவி ஒன்று கிடைத்துள்ளது.
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக இரா. சாணக்கியன் அவர்களும், பேராசிரியர் கிருஷாந்த அபேயசேனவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
ஒன்றியத்தின் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜெகத் மனுவர்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதி இணைத்தலைவர்களாக நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
பத்தாவது பாராளுமன்றத்தில் மீண்டும் சாவிக்கப்பட்ட திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது
இதன் போது ஒன்றியத்தின் இணை தலைவராக அமைச்சர் கௌரவ பேராசிரியர் கிருஷாந்த அபேயசேனவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி ஜனகர் சேனாரத்ன முன்மொழிந்ததுடன், கௌரவ சட்டத்தரணி பாக்கியசிறி கேரத் அதனை வழிமொழிந்தார்.
இரா. சாணக்கியன் அவர்களது பெயரை எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாசா அவர்கள் முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நலின் பண்டார வழிமொழிந்தார்.
அத்துடன், ஒன்றியத்தின் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜெகத் மனவர்ன தெரிவு செய்யப்பட்டதுடன், பிரதி இணை தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சட்டத்தரணி சமிந்திராணி கிரி எல்லே, கௌரவ சந்தன சூரி ஆராச்சி, கௌரவ எஸ் எம் மரிக்கார் மற்றும் கௌரவ சட்டத்தரணி துசாரி ஜெயசிங்க ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
பாராளுமன்றத்தை பொதுமக்களுக்கு நெருக்கமடைய செய்வதற்கு இந்த ஒன்றியத்தின் மூலம் மேற்கொள்ள கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள எதிர்பார்க்கிறேன் அதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் நல்குறேன் என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்கள் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தப் புதிய பொறுப்பின் மூலம், சாணக்கியன் மக்கள் குறைகளை சமர்ப்பிக்கும் செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது மட்டக்களப்பு மாவட்டத்தின் மரியாதையையும் பாராளுமன்றத்தில் அவருடைய செயல்திறனையும் உயர்த்தும் அடையாளமாக அமைகிறது.