மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள கோட்டைக்கல்லாற்றில், பிரியோனாலுரஸ் விவெரிரினஸ் என்ற அரிய மீன்பிடிப் பூனை இன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டது. பொதுவாக மீன்பிடிப் பூனை என்று அறியப்படும் இவ் வகை புலியினம் மக்களால் பராமரிக்கப்படும் பிராணிகளையும், மீன்களையும் வேட்டையாடும் பழக்கத்தில் இருந்தது.
சுமார் 3 அடி நீளமான இந்த புலியின் சடலம் கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் கிடைத்தது. இதன் மரணம் விபத்து காரணமாக அல்லது தாக்குதலின் காரணமாக ஏற்பட்டதா என்பதில் வனவளத்துறை மற்றும் பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
புலியின் சடலத்தை சுற்றி மல்லிகைப் பூக்கள் தூவப்பட்டுள்ளதும், அப்பகுதியில் புலி கோழிகளை வேட்டையாடி வந்ததாக மக்கள் கூறியுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1