உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51 வது ஆண்டு நினைவேந்தல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கத்தின் அழைப்பின் பெயரில் உலகத் தமிழராய்சசி மாநாட்டு படுகொலை நினைவு தூபியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
இதன் பொழுது உயிர் நீத்த உறவுகளை நினைவறுத்தி பொதுச்சுடரினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் ஏற்றி வைத்தார் . தொடர்ந்து ஈகை சுடர் ஏற்றப்பட்டு செலுத்தப்பட்டது.தொடர்ந்து உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டது .
இதன் பொழுது பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் , வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் , உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் கருணாகரன் நாவலன்சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜோதி லிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.