26.1 C
Jaffna
January 25, 2025
Pagetamil
இலங்கை

உலகத்தமிழாராய்ச்சி படுகொலை நினைவு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழராட்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாடடில் அதன் பதில் தலைவர் சீவிகே சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்பொழுது உயிரிழந்த ஒன்பது உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது .

இதன் பொழுது வடமாகாண அவைத்தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான சி வி கே சிவஞானம் , முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் , வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் சர்வேஸ்வரன் , வடக்கு மாகாண சபை முன்னாள உறுப்பினரான சுகிர்தன் , யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட் , இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம் , முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

2வது நாளாக பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதம்

Pagetamil

அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தம் இரத்தாகவில்லையாம்!

Pagetamil

வடமராட்சி மக்களுக்கு புதிய உதவிகள்

east tamil

வத்திராயனில் காயங்களுடன் உயிருக்கு போராடிய நபர் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

கல்கிசையில் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

east tamil

Leave a Comment