இம்முறை நடைபெறவுள்ள 77வது சுதந்திர தின விழா, பாரம்பரிய நிகழ்வுகளை மாற்றியமைக்கப்படுவதன் மூலம் புதிய தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. குறிப்பாக, பழமையான 21 பீரங்கி வேட்டுகள் இந்த வருடம் இடம்பெறாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
2025ம் ஆண்டின் சுதந்திர தின நிகழ்வுகள், வரும் பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடக்கவிருக்கின்றன. நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, இவ்விழா எளிமையான முறையில், குறைந்த செலவினங்களுடன் திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, 2025ம் ஆண்டில் சுதந்திர தின விழாவின் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், பங்குகொள்ளும் விருந்தினர்களின் எண்ணிக்கை 3,000 இருந்து 1,600 ஆக குறைக்கப்பட்டுள்ளதோடு, வழமையாக இடம்பெறும், இராணுவ அணிவகுப்பின் போது ஆயுத வாகனங்கள் இம்முறை காட்சிப்படுத்தப்படமாட்டாது எனவும், முப்படைகள் மற்றும் பொலிஸ் அணிவகுப்புகளில் கலந்துகொள்ளும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,