மாமனாரைத் தாக்கிய குற்றச்சாட்டில், கொழும்பில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை மொரந்துடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மாமனாரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும், இக்குற்றம் தொடர்பான விசாரணைகளை நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் கலும் டி சில்வா தலைமையிலான குற்றப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் பாணந்துறை நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1