பொதுப் போக்குவரத்துக்கான சாரதிகள் (பேருந்து ஓட்டுநர்கள்) 23 வயது தொடங்கி 65 வயதுக்குள் உள்ளவர்களாக, நல்ல உடல் நிலை உடையவராக இருந்தால்தான் அனுமதிப்பத்திரம் பெற முடியும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஜகத் விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
“பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள அரசிதழின் அடிப்படையில், 23 முதல் 65 வயதுக்குள்ளவர்களுக்கு உடல் தகுதி இருந்தால் மட்டுமே பொதுப் போக்குவரத்திற்கு உள்ள பேருந்து போன்ற வாகனங்களை ஓட்ட அனுமதி வழங்கப்படுகிறது. 65 வயதுக்கு பிறகு, தனியார் வாகனங்களை மட்டும் ஓட்ட முடியும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1