கையடக்க தொலைபேசிகளை பதிவு செய்ய வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட அவகாசம் எதிர்வரும் 28ம் திகதியுடன் முடிவடையவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRC) அறிவித்துள்ளது.
இந்த அவகாசத்திற்குள் IMEI இலக்கங்களை TRCயில் பதிவு செய்ய தவறினால், அந்த கையடக்க தொலைபேசிகள் நாட்டின் தொலைபேசி வலையமைப்பில் செயலிழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
ஆனால், 28ம் திகதிக்கு முன்பே IMEI இலக்கங்களை பதிவு செய்தவர்களுக்கு எந்தவிதத்திலும் பிரச்சினை ஏற்படாது என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தற்போது உறுதியளித்துள்ளதுடன், ஸ்டார் லிங்க் சேவைக்கான தொலைத்தொடர்பு பொதிகளின் கட்டணங்களுக்கு TRC ஒப்புதல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1