நாடு எதிர்பார்க்கும் மிகப் பெரிய மாற்றங்களை ஒன்றரை மாதங்களில் கொண்டு வருவோம் என பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால உறுதியாக கூறியுள்ளார். ஊழல், மோசடி, இலஞ்சம், மற்றும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் முழு வேகத்தில் நடைபெற்று வருவதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்,
“அரசாங்கம் எந்தவொரு விசாரணையையும் நிறுத்தவில்லை; மேலும் அவை எந்தவொரு அரசியல் முயற்சிகளாலும் பாதிக்கப்படவில்லை,” என்று அவர் வலியுறுத்தினார். விசாரணைகள் சுயாதீனமாக நடத்தப்படுவதற்காக இரகசிய பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஊழல், மோசடி, மற்றும் இலஞ்சத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இது நாட்டு மக்களுடன் எங்கள் ஒப்பந்தமாகும் என நாடாளுமன்றத்தில் உறுதியளிப்பதாக ஆனந்த விஜயபால குறிப்பிட்டார்.
ஒன்றரை மாதங்களில் நாட்டின் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் மாற்றங்களை நாட்டுக்கு தருவதாகக் கூறி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
இந்த விசாரணைகள் எதுவும் அரசியலாக்கப்படவில்லை என தெரிவித்த அவர், தமது அரசாங்கம் பொலிஸாரை சிபாரிசு செய்ய வைத்துள்ளதாகவும் இரகசிய பொலிஸாருக்கு விரிவான அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவை அனைத்தையும் சுயாதீனமாக ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், ஊழல், மோசடி, இலஞ்சத்திற்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என்பது நாட்டு மக்களுடன் அரசாங்கத்தின் உடன்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.