Pagetamil
கிழக்கு

தொடரும் திருகோணமலை நகரை தூய்மைப்படுத்தும் சிறப்பு வேலைத்திட்டம்

திருகோணமலை நகரைச் சுத்தமாக்கும் நோக்கில் செயலாளர் தே. ஜெயவிஷ்ணு அவர்களின் ஆலோசனையின் கீழ், பதில் கணக்காளர் திரு C. புவனதாசன் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு N. பரமேஷ்வரன் ஆகியோரின் தலைமையில் நேற்று (08.01.2025) மனையாவெளி முதல் மடத்தடி சந்தி வரை விசேட திண்மக்கழிவகற்றல் சேவை இடம்பெற்றது.

இந்நிலையில், நேற்று சில பகுதிகள் தவறவிடப்பட்ட காரணத்தால், இன்றும் (09.01.2025) இச்சேவை தொடர்ந்து நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உவர்மலை, இலிங்கநகர், அன்புவழிபுரம் போன்ற பகுதிகளிலும் பணியாளர்கள் வருகை தந்து திண்மக்கழிவுகளை அகற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, பொதுமக்கள் தங்களது வீட்டுக்கழிவுகளை உரிய முறையில் சேகரித்து வரும் வாகனங்களிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், ஏனைய பகுதிகளில் வழமையான திண்மக்கழிவகற்றல் சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும், இது தொடர்ச்சியாக நகர சுத்தம் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தம்பலகாமத்தில் ஜனநாயக பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்

east tamil

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா – 2025

east tamil

யானையின் தாக்குதலால் வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி

east tamil

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் மற்றுமொரு விபத்து

east tamil

அலஸ்தோட்ட கடற்கரையில் இறந்த திமிங்கலம்: புதைக்கும் பணிகள் முன்னெடுப்பு

east tamil

Leave a Comment