இன்றைய தினம் (08.01.2025) இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமிக்கப்பட்ட பின்னர், பாதுகாப்புச் செயலாளருடன் நடைபெற்ற முதல் உத்தியோகபூர்வ சந்திப்பாக இது அமைந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இராணுவத்தை முன்னேற்றம் செய்யும் தளபதியின் தலைமைத்துவம் மீது பாதுகாப்புச் செயலாளர் ஆழ்ந்த நம்பிக்கை தெரிவித்த அதேவேளை, இராணுவத் தளபதியாக தனது நியமனம் பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ரொட்ரிகோவிற்கு, பாதுகாப்புச் செயலாளர் வாழ்த்து தெரிவித்ததுடன், நினைவுப் பரிசையும் வழங்கி கௌரவித்துள்ளார்.
இச் சந்திப்பு இராணுவத்தின் முன்னேற்றத்திற்கான எதிர்கால நோக்கங்களை வடிவமைப்பதற்கான முக்கியமான வழிகாட்டுதலாக மாறியதாக மதிப்பிடப்படுகிறது.